ஜோயல் தலைமையில் தூத்துக்குடி திமுக பொறுப்பாளர்களுக்கு கிடாக்கறி விருந்து
மாவட்ட செயலாளராகிறாரா ஜோயல்..?
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் அடங்க மறுப்பதற்கு முன் , ஜோயல் தலைமையில் புதிய விஸ்வரூபம் வெள்ளிக்கிழமை மதியம் தூத்துக்குடி யில் அரங்கேறியது திமுகவினயிடையே பெறும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் மீது தொண்டர்கள் எழுப்பிய குற்றச்சாட்டை தலைமை கே.என்.நேரு மூலமாக விசாரணை செய்த சம்பவம் அடங்கும் முன்பாக , அவரால் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் , மூத்த கழக தொண்டர்கள் என அனிதா எதிர்ப்பாளர்களை ஒதுக்குபுரமாக அழைத்து அவர்களுக்கு கிடாக்கறி விருந்தை வழங்கி அவசர அவசரமாக அனைவரையும் தன்வசபடுத்திக் கொள்ள ஜோயல் முயற்சித்ததன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ள திமுக அனுதாபிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த விருந்தில் வடக்கு மாவட்டத்தை சார்ந்த கீதா ஜீவனின் எதிர்ப்பாளர்கள் பலரும் இந்த கிடாக்கறி விருந்தில் கலந்து கொண்டது ஓர் சலசலப்பை உருவாக்கியுள்ளது. கீதா ஜீவனால் ஓரங்கட்டப்பட்டு , ஒதுக்கிவிட்ப்பட்ட கழக முன்னோடிகள் , மாவட்ட மற்றும் மாநகர் உள்பட்ட வட்ட கழக பொறுப்பாளர்கள் பலரும் இந்த விருந்தில் கலந்து கொண்டு தனது ஆதரவை மறைமுகமாக வழங்கியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. இதில் கலந்து கொண்டவர்களில் பலரும் அண்ணாச்சி பெரியசாமி செயல்பட்டு வந்த தெற்கு மாவட்ட வரையறையை ( தூத்துக்குடி , திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ) அப்படியே மீண்டும் நடைமுறை படுத்தி அதில் ஜோயலை மாவட்ட பொறுப்பாளராக ஒரு மனதாக தேர்வு செய்ததாக அறிவிக்கப்பட வேண்டும் என திமுக தலைமை கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு நிலுவையில் இருந்துவரும் இந்த இக்கட்டான கால சூழ்நிலையில் சென்னையில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி வந்து இரண்டு மாவட்ட பொறுப்பாளர்களின் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து , இருவருக்கும் எச்சரிக்கை விடுப்பதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லையே என ஒருவருக்கொருவர் வருத்தம் தெரிவித்து கொண்டனர்.

