தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் ரூபாய் 96.77 கோடியில் விரிவாக்கம் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின
ஜூலை 27 தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் மற்றும் விமானங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் பணிகளை இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் தூத்துக்குடி விமான நிலையத்தில் 96.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓடுதள விரிவாக்கம் விமானங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கின விமான நிலையம் அமைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் தூத்துக்குடிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் ஐந்து விமானங்களும் பெங்களூருக்கு ஒரு விமானமும் தினமும் 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன இதன் மூலம் சராசரியாக தினமும் 700 பயணிகள் பயணித்து வந்தனர் தற்போது குரானா ஊரடங்கு காரணமாக தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி விமானத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்துவதற்குகான பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த விமான நிலைய தேவையான விரிவாக்கத்திற்கு தேவையான 600.97 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் அண்மையில் இலவசமாகக் கொடுத்தது இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் படிப்படியாக தொடங்கியுள்ளது முதல்கட்டமாக இரவு நேர விமான சேவைக்கான அனுமதி அளிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக மிகமுக்கியமான விரிவாக்க பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது
96.77 கோடி மதிப்பிலான இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார் கட்டுமானம் பிரிவு பொதுமேலாளர் இராதாகிருஷ்ணன் எலக்ட்ரிகல் பிரிவு உதவி பொது மேலாளர் கே.ஜி.பிஜீ, விமான போக்குவரத்து பிரிவு உதவி பொது மேலாளர் சுப்ரவேலு தகவல் கட்டுப்பாட்டு பிரிவு துணை பொது மேலாளர் அனுசியா விமான நிலைய மேலாளர் ஜெயராமன், தீயணைப்பு துறை மேலாளர் கணேஷ் காவல் ஆய்வாளர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறும்பொழுது தற்போதுள்ள 30 மீட்டர் அகலம் 1350 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம் 45 மீட்டர் அகலமும் 3515 மீட்டர் நீளமும் கொண்டதாக விவாகம் செய்யப்படுகிறது இதன்மூலம் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும் மேலும் 23 மீட்டர் அகலமும் 344 மீட்டர் நீளமும் கொண்ட நீளம் கொண்ட விமானங்கள் திரும்பும் பாதை மற்றும் ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தி வைக்கும் அளவிற்கு விமானங்கள் நிறுத்துமிடம் விமானத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த விமானங்களை தனியாக நிறுத்தி பிரச்சனையை சரி செய்யும் வசதி போன்ற பணிகளுக்கு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது தூத்துக்குடி விமான நிலையம் தொடங்கப்பட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது இந்த பணிகள் அனைத்தும் 18 மாதங்களில் முடிவடையும் எனவும் விமான ஓடுதளம் விரிவாக்க பணிகளுக்காக டிசம்பர் 31-ஆம் தேதி வரை 6 மணி முதல் 6 மணி வரை விமான நிலைய ஓடு தளம் மூடப்படும் எனவும் இரவு நேர சேவைகள் நடைபெறாது என்றும் கூறினார்
தூத்துக்குடி செய்தி நீதிராஜன்

