நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் எதிர்வரும் (05.10.2021 மற்றும் 06.10.2021); தேதிகளில் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் தகவல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் படி கோவில்களில் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 06.10.2021 – ஆம் தேதி (புதன்கிழமை) மகாளய அமாவாசை தினமான அன்று நாகப்பட்டினம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதாலும் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்களால் கூட்டம் அதிகமாகி அதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் சுழ்நிலை உருவாகக்கூடும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
அதன்படி எதிர்வரும் 05.10.2021 மற்றும் 06.10.2021 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வழிபடவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சென்று நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு:
லயன் டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

