நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை மாவட்ட ஆட்சியர் திரு.அ.அருண்; தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்
————–
நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் ரௌண்டானாவில் வன உயிரினங்களின் பாதுகாப்பு வார விழா முன்னிட்டு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு.அ.அருண்; தம்புராஜ்,இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்து சைக்கிள்; பேரணியில் கலந்து கொண்டார். வன உயிரினக்காப்பாளர் திரு.யோகேஷ் குமார் மீனா, இ.வ.ப மாவட்ட காவல் கண்காணிப்பளார் திரு.கு.ஜவஹர்.இ.கா.ப,உடன் நேற்று (03.10.2021) கலந்து கொண்டனர்.
சைக்கிள் பேரணியானது புத்தூர் ரௌண்டானாவில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் பேரணியை கொடியைத்து தொடங்கிவைத்தார். மோட்டார் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து வேதராண்யம் வரை சென்று அடைகிறது. இதில்; வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வன உயிரின வார விழா அக்டோபர் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரினக்கோட்டத்தின் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான வன உயிரின வாரவிழா (02.10.2021 முதல் 08.10.2021 வரை) நடைபெறுகிறது.
உணவு சங்கிலியின் மூலாதாரமே வன உயிரினங்கள்தான்.. மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாகவும் மனித இனத்திற்கு ஏராளமான மருந்துகளையும், மருத்துவ மூல பொருட்களையும் தருகின்றன. பூச்சிகளை கட்டுப்படுத்தி விவசாய நண்பனாக விளங்குகின்றன.பொதுமக்கள் அனைவரும் வன உயிரினங்களின் அழிவிற்கு காரணமாக இருக்காமல் அவற்றை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் திரு.அ.அருண்; தம்புராஜ், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் திரு. பெ.பெரியசாமி மாவட்ட விளையாட்டு அலுவலர்,துணை காவல் கண்காணிப்பாளர்வனச்சரக அலுவலர் வேதாரண்யம் வனச்சரக அலுவலர் சீர்காழி, நாகை மிதிவண்டி உபயோகிப்போர் சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு:
லயன் டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

