• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு விடிய விடிய காவல்துறையினர் தீவிர ரோந்து 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.

policeseithitv by policeseithitv
October 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு விடிய விடிய காவல்துறையினர் தீவிர ரோந்து 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) – 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று முன்தினம் (03.10.2021) இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Storming Operation) மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 40 ரவுடிகள் உட்பட 90 பேர் பிடிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது, பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ள மற்றவர்கள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 101 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட 446 முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன சோதனையில் 2019 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 1846 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 44 எதிரிகள் கைது செய்யப்பட்டு, 962 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

இந்த தீவிரப்பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் கடற்கரை பகுதிகளுக்கு வர தடை – ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் தகவல்

Next Post

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தனியார் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

Next Post
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தனியார் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தனியார் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In