விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார்
————–
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 300 கா்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி கம்மாவார் திருமண மஹாலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலைமை வகித்தாா். பின்னர் வினா பேருரையாற்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வீரலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கா்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு மற்றும் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கான விழிப்புணா்வு வழிகாட்டி புத்தகங்களையும் எம்எல்ஏ அசோகன் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட சமுதாய வளைகாப்பு விழா சிவகாசியில் எம்எல்ஏ அசோகன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மூ .வீரபாலு நன்றியுரையாற்றினார்.
செய்தி தொகுப்பு:
விருதுநகர் மாவட்ட செய்தியாளர் மா. மாரிமுத்து,
மாவட்ட புகைப்படக் கலைஞர், பா. பாக்கியராஜ்

