நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மகாதானம்; ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில்; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 193 ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகள் தவிர மற்ற ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபா கூட்டம் இன்று (02.10.2021) நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மகாதானம் ஊராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் பார்வையாளராகப் பங்கேற்று ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கிராமசபா கூட்டத்தில், ஆகஸ்ட் -2020 முதல் செப்டம்பர் -2021 வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை – கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனம்;, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், தமிழ்நாடு நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல்;, ஊராட்சிப் பகுதிகளில் திட்டப்பணிகளின் முன்னேற்றம் நிதிசெலவினங்கள் குறித்த விவாதம், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்த விவாதம், பெண்கள்;, குழந்தைகளின்; மற்றும் தனிநபர் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம் (Pழளாயn யுடிhலையயn), வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சியில் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்தல், 2020-2021 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை செப்டம்பர் -30 வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதம்;, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) தொகுதி 2ல் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை தக்க வைத்தலுக்கான கூடுதல் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை தக்க வைத்தல் பற்றி விவாதித்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பராமரிக்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு பாராட்டு தெரிவித்தல், ஊராட்சியின் பொது இடங்கள், அனைத்து குடியிருப்புகள், பள்ளி மற்றும் அங்கன்வாடி கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல், கழிவறை அமைக்காத அல்லது பயன்படுத்தாத பொதுமக்கள் பெயர்களை கிராமசபாவில் வாசித்தல், பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை காவலர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து தரம் பிரித்தல், நெகிழி (பிளாஸ்டிக்)க்கு மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், திரவ கழிவு மேலாண்மைத் திட்டத்தில் ஆற்றுப்படுகைகளில் கழிவு நீர் கலத்தல் மற்றும் குப்பைகள் கொட்டுவதன் மூலம் நீர் நிலை மாசுபடுவதை தடுப்பது குறித்தும், விரிவான கிராம சுகாதார திட்டத்தை பற்றி விவாதித்தல், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2021 குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தல் ஆகியவை மற்றும் கிராம ஊராட்சி தனி அலுவலர் அனுமதியுடன் கொண்டுவரப்படும் பல்வேறு பிரச்சனைகள் போன்றவை தொடர்பாக விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.

கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
‘தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி, கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட்டு, கிராம மக்களுக்கு அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்கள் குறித்து விளக்கி பொதுமக்களிடம் விவாதம் செய்து கருத்தரியும் கூட்டமாக நடைபெற்று வருகிறது. குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தேசிய தினங்களில் கட்டாயமாக கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர அவ்வப்போது அரசினால் அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறுவதற்கு சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தேசப்பிதா காந்தியடிகள் அவர்கள் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி கிராமப் புறங்களின் வளர்ச்சியைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். கிராமப்புற பொருளாதாரம் வலுவாக இருந்தால் தான், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதனடிப்படையில் கிராம சபாக் கூட்டங்கள் வாயிலாக அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்தறிந்து அதனடிப்படையில் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது.
மேலும், எதிர்வரும் பருவமழைக் காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் பொருட்டு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொதுக் கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும். ஏற்கனவே, நிறுவப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் அடைப்புகள் ஏதுமின்றி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு குக்கிராம அளவிலும் துண்டு பிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் மற்றும் ஊர்வலங்கள் போன்ற பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் குடிநீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்கள் அருகில் குளித்தல், துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற செயல்களை தவிர்த்திட வேண்டும். குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகிக்க வேண்டும். தெரு குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுத்திடும் வகையில் பயன்பாட்டில் இல்லாத போது குடிநீர் குழாயை மூடிவைத்திட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம் ( Pழளாயn யுடிhலையயn) நடத்த மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர், 2020 மாதத்தினை தேசிய ஊட்டச்சத்து மாதமாக (யேவழையெட ரேவசவைழைn ஆழவொ) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கொண்டாடப்பட்டது. ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான விவரங்கள் அனைத்து கிராமப்புற மக்களையும் சென்றடையும் வகையிலும் மேலும் இது தொடர்பாக நடத்தப்படும் அனைத்து முகாம்களிலும் கிராமப்புற
மக்களை பங்கு பெற செய்திடும் வகையில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள் (Pடுகு), கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் (ஏPளுஊ), சமுதாய தலைவர்கள் மற்றும் ஊர் பெரியவர்களையும் பங்கு பெற செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் அரசாணையின் படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விநியோகம், மற்றும் விற்பனை ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தடையின் செயல்பாட்டை கண்காணிப்பது குறித்தும் நெகிழிக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நமது மாவட்டம் உருவாகும் வகையில் அனைவரும் ஒத்துழைக்கவும், மேலும் ஊராட்சியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களான தேநீர்கடை, பெட்டிக்கடை, சிற்றுண்டி உணவகங்கள், மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யாமல், முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
அதைத் தொடர்ந்து குழந்தைகள் தவறான பாதையில் செல்ல தொலைக்காட்சி முக்கிய காரணங்களாக உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பெண் குழந்தைகளுக்கு தவறான தொடுதல் பற்றி கூறுவதும் பெற்றோர்களின் முக்கிய பங்காகும். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை பற்றி குற்றபதிவு செய்ய தாமாக முன்வர வேண்டும் என தெரிவித்து பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார். காச நோய், பெண் சுதந்திரம் மற்றும் குழந்தை தொழிலாளர் போன்ற விழிப்புணர்வு உறுதி மொழியினை இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் எடுத்துக் கொண்டார்.
இக்கூட்டத்தில் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு.நாகை மாலி, வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.மணிவேலன், ஊரகவளர்ச்சித்துறை செயற்பொறியாளர் திரு.என்.பசுபதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.எஸ்.ராஜசேகர், இணை இயக்குநர்(வேளாண்மை)திரு.பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.பாலமுருகன், ஆர்.அண்ணாதுரை, வட்டாட்சியர் திரு.ஜெயபாலன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

