தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக இன்று 02.10.2021 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு பேரணியாகச்சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேற்படி நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் / மாவட்ட தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.V.பாண்டியராஜ் அவர்கள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. A. பிலிப்ஸ் நிக்கோலஸ் அலெக்ஸ், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி திரு. P.சுவாமிநாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு. R.செல்வக்குமார் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, நீதித்துறை நடுவர்கள், II, IV, வழக்கறிஞர்கள், போலிஸ் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்கள். மேற்படி முன்னதாக பேரணியை தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. V.பாண்டியராஜ் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேற்படி பேரணி நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் /சார்பு நீதிபதி திருமதி.M.பிரீத்தா, M.L., அவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

