நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் – பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா பக்கவாரா மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் – பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா பக்கவாரா மூன்றாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு முகாம்; 04.10.2021 அன்று வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், 05.10.2021 அன்று தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலகம், 06.10.2021 அன்று கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலகம்;, 07.10.2021 அன்று கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை பெறாத பொதுமக்கள் அனைவரும் குடும்ப அட்டை நகல், ஆதார்அட்டை நகல் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- கீழ் குறைவாக உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்றிதழையும் பெற்று சிறப்பு முகாம் நடைபெறும் நாளன்று, முகாம் நடைபெறும் இடங்களில் தவறாமல் கலந்துக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்;பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

