விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.*
???? *கடந்த 15.09.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விளாத்திகுளம் சன்னதி தெருவைச் சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (45) என்பவர் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் ஜெயராஜை கைது செய்தனர்.*
???? *கடந்த 07.09.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விளாத்திகுளம் குரலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் முத்துசாமி (60) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் சகோதரர் உமையனன் என்பவரது மகன் கணேசமூர்த்தி (41) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கணேசமூர்த்தியை கைது செய்தனர்.*
???? *மேற்படி விளாத்திகுளம் காவல் நிலைய வழக்குகளில் ஈடுபட்ட எதிரி ஜெயராஜ் என்பவர் மீதும் கணேசமூர்த்தி என்பவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரைப்படி விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.*
???? *மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.*
???? *அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் விளாத்திகுளம் சன்னதி தெருவைச் சேர்ந்த கனிராஜ் மகன் 1) ஜெயராஜ் மற்றும் விளாத்திகுளம் குரலையம்பட்டியைச் சேர்ந்த உமையனன் என்பவரது மகன் 2) கணேசமூர்த்தி ஆகிய 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மேற்படி எதிரிகள் 2பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதுவரை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் மட்டும் கடந்த 9 மாதங்களில் 11பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.*

