• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது – கைது செய்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு

policeseithitv by policeseithitv
September 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியில்  22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது – கைது செய்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1995ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட்ட பிறப்பித்து 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் உட்கோட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் தருவை பாலத்திற்கு அருகே கடந்த 18.02.1995 அன்று வேம்பார் மேலத்தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பழனிவேல் (40/95) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கின் எதிரிகளை 20.02.1995 அன்று கைது செய்து 14.05.1996ம் அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் எதிரிகளில் ஒருவரான தூத்துக்குடி பச்சையாபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் சந்திரமோகன் (70) என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார், இதனால் 07.06.1999 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து 22 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள மேற்படி எதிரி சந்திரமோகனை கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாதபாண்டியன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு, தீவிர தேடுதல் வேட்டையில்  தலைமறைவாக இருந்து வந்த எதிரி சந்திரமோகனை கைது செய்தனர்.

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மேற்படி கொலை வழக்கு எதிரி சந்திரமோகனைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்

Next Post

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 – வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

Next Post
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 – வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 - வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In