*மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்*
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம்பட்டியில் உள்ள நடுப்பட்டி பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக (கதம்ப) விஷ வண்டுகள் கூடுகட்டி இருப்பதாக மேலூர் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்,
இதனை தொடர்ந்து மேலூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ராமராஜன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பொன்னாண்டி, ராஜசேகர், ரஞ்சித்குமார், அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவச உடை அணிந்து ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் விஷ வண்டுகளை அளித்தனர்.

