தமிழ்நாடு இணையதள செய்தியாளர்களின் மாநில தலைவர் கடலூர் மகே. செல்வமணியின் தந்தை மகேந்திரன்
அவர்கள் மறைவு!!
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்!
———
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கிங் எம் கண்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சி .பி. கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது தமிழ்நாடு இணையதள செய்தியாளர்களின் மாநில தலைவர் எங்கள் பாசமிகு அருமை சகோதரர் மகே. செல்வமணி யின் தந்தை மகேந்திரன் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அடையச் செய்தது அன்னாரின் ஆன்மா இறைவனடி இளைப்பாற இறைவனை பிராத்திக்கிறோம் தந்தையை இழந்த எங்கள் பாசமிகு சகோதரர் கடலூர் செல்வமணி மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இறைவன் மன தைரியத்தையும் மன அமைதியையும் கொடுக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறோம் ஐயா மகேந்திரன் அவர்கள் இழப்பு எங்கள் அமைப்பைச் சார்ந்த அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும் என்று தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

