வேதாரண்யம் அடுத்த மருதூர் கடைத்தெரு பகுதியில் விவசாய சங்கம் அறிவித்த பாரத தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி இ.கம்யூ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை நீக்க கோரி விவசாயிகள் கடந்த 300 நாட்களுக்கும் மேலாக போராட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நாளான 27ம் தேதி விவசாய சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து இ.கம்யூ. கட்சியின் ஒரு பிரிவான விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

