வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதும், அவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள், ஜிபிஎஸ் கருவி ஆகியவை பிடுங்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23.09.2021 அன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்களை தாக்கி காயப்படுத்திய இலங்கை மீனவர்களை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர் நேற்று முன்தினம் தொடங்கிய மீனவர்கள் வேலை நிறுத்தம் வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

