அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி – வெளிநாடு பிரிவு தொடக்கம்
அகில இந்திய இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி” ( ALL INDIA DISABLED PARTY ) AIDP – கட்சி யின் நிறுவனர் & தேசிய தலைவர். டாக்டர். வழக்கறிஞர். திண்டுக்கல். M. முகமது அனஸ் M.A.B.L., திண்டுக்கல் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது
நமது அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி என்பது உலகிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் தலைமை ஏற்கும் இந்திய அளவிலான தேசிய கட்சி ஆகும் .
அதே நேரத்தில் இது சமூக அரங்கில் அனைத்து மக்களுக்கும் பொதுவான அனைத்து மக்களுக் சேவை செய்யும் கட்சிகளாக தான் நாம் உருவாகி இருக்கிறோம் கட்சியை பொறுத்தவரை 50 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் மெலும் இருக்கும் 50 சதவீதம் மாற்றுத்திறனாளி அல்லாத நாட்டில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், திருநங்கை சமூகம், மக்கள் பணி நம்மோடு இணைந்து மக்கள் சேவை அரசியல் செய்ய எண்ணம் உள்ள அனைவரையும் வரவேற்கிறோம்
இப்படியாக அனைத்து தரப்பினரையும் இணைத்து உரிமைகள் மறுக்கப்படும் அனைத்து சமூகத்தின் குரலாக இந்திய அரங்கில் சேவை அரசியலை அறிமுகம் செய்கிறோம் . தற்போது நமது கட்சியில் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அந்தமான் போன்ற மாநிலங்களில் நிர்வாகம் அமைத்து சிறப்பானதொரு செயல்பாடுகளை துவங்கி இருக்கிறோம் … அதில் ஒரு மையில் கல்லாக கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்கள் பணிகளுக்காகவும் நமது எல்லைகள் விரிவடைய வேண்டிய கால சூழலில் நமது இந்திய மாற்றுத்திறனாளிகள்உரிமைகள் மறுக்கப்படும் அனைத்து சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு வெளிநாடு வாழ் இந்திய சமூக ஆர்வலர்கள் கை கொடுக்க …. தற்போது நமது கட்சியின் “வெளிநாடு பிரிவு” இனிதே துவக்கப்பட்டு …. முதல்கட்டமாக “சௌதி அரேபியா” மற்றும் “துபாய்” நாடுகள் மண்டலங்களாக உருவாக்கி அதன் நிர்வாகிகளை தேசிய நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் அறிவிப்பு செய்கிறேன்
அதன் படி
சௌதி அரேபியா மண்டலம்
சௌதி மண்டல தலைவர் V.சேக்முகைதீன்
சௌதி மண்டல துணைச் செயலாளர் A.முகமது புஹாரி
துபாய் மண்டலம்
துபாய் மண்டல தலைவர்
A.அப்துல் ஹமீத்
துபாய் மண்டல செயலாளர்
A.J நிஜாம் மைதீன்,
துபாய் மண்டல பொருளாளர் நியாஸ் அகமது
துபாய் மண்டல துணைத்தலைவர் A.சம்சுதீன்
துபாய் மண்டல துணைச் செயலாளர் K.அப்துல் அஜீஸ்
துபாய் மண்டல துணைச் செயலாளர் C.சுபாகர்
ஆகியோர் அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின்… “வெளிநாடு பிரிவு” -ல் “சௌதி அரேபியா” மற்றும் “துபாய்” ஆகிய நாடுகளின் AIDP_ கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப் படுகிறார்கள் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்
நிகழ்வில் தேசிய பொருளாளர். தர்மராஜ், தேசிய பொதுச்செயலாளர். நாகஜோதி, தேசிய துணைத்தலைவர். செந்தில் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர். ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

