வேதாரண்யம் லயன்ஸ் சங்கம், பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மெகா இலவச கண் சிகிச்சை முகாம்
_______________
வேதாரண்யம் லயன்ஸ் சங்கம், பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்ட 458 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 114 பேர் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முகாமில் லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் வேதநாயகம், முன்னாள் தலைவரும் வர்த்தக சங்க தலைவருமான தென்னரசு, நகை கடை சங்கத் தலைவர் அம்பாள் குணசேகரன், வேதாரண்யம் ரோட்டரி சங்கத் தலைவர் புயல் குமார், மா.மீ.அன்பரசு, வேதாரண்யம் சரக துணை கண்காணிப்பாளர் உட்பட சங்க முன்னாள் தலைவர்கள், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த மெகா மருத்துவ முகாம் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பேருதவியாக காணப்பட்டது
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

