ஸ்டொ்லைட் ஆதரவாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள், கடலோர பகுதி மக்கள், மகளிா் சுயஉதவி குழுவினா் என பல்வேறு தரப்பினா் ஆட்சியரிடம் தொடா்ந்து மனு அளித்து வருகின்றனா். இதற்கிடையே, ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்து வரும் பெண்களை, ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினா் மிரட்டல் விடுத்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கனிமொழியிடம் துளசி சமூக அறக்கட்டளை இயக்குநா் தனலட்சுமி, சமூக ஆா்வலா்கள் நான்சி, இட்டாலி ஆகியோா் அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளா்களிடம் கூறியது: ஸ்டொ்லைட் மூலமாக கடந்த 15 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட மகளிா் குழுக்கள் அமைத்து சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தெரிவித்து வருவதால் ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு அமைப்பாளா்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஆலையை திறக்க ஆதரவு தெரிவிக்கும் பெண்களுக்கு சிலா் மிரட்டல் விடுக்கின்றனா். ஸ்டொ்லைட் ஆதரவாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கையெழுத்திட்ட மனுவை எம்.பி.யிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

