தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் “அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார்”18 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார் 18 வது நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து வெங்கடேச பண்ணையார் உருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணிபிச்சை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார் அவர்கள் சமுதாயத்திற்கு செய்த நற்பணிகள், ஆன்மிகத்திற்கு ஆற்றிய திருப்பணிகள், ஏழை-எளியோர்களுக்கு வாரி வழங்கிய நன்கொடைகள் என பல்வேறு விசயங்களை நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ்குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், ரெக்ஸ் மாவட்ட பிரதிநிதி பழனிவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ் மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் சதாசிவம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாநகரச் செயலாளர் உதயசூரியன் நகர அவைத்தலைவர் மதியழகன் மாநகர துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து

