முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய ஆணையில் தங்கள் மனைவி பெயரை சேர்க்க – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 01.03.1985-க்கு முன்னர் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய கொடுப்பாணையில் தங்கள்; மனைவியின் பெயரினை பதிவு செய்யாமல் இருப்பதால் தங்கள் காலத்திற்கு பின்னர் தங்கள் மனைவியர் குடும்ப ஓய்ñதியம் பெறுவதற்கு அதீத சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே, 01.03.1985-க்கு முன்னர் படைப்பணியிலிருந்து வெளிவந்து ஓய்ñதிய கொடுப்பாணையில் மனைவியின் பெயரினை பதிவு செய்யாத முன்னாள் படைவீரர்கள் உடன் தங்கள் மனைவியின் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண்.10 மற்றும் 11-ல் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

