திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில்; திருமருகல் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் வைட்டமின் ‘ஏ’உயிர்ச்சத்து திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் இன்று (20.09.2021) துவங்கி வைத்தார்.
உலகஅளவில் 2010 ஆம் ஆண்டின் நிலவரப்படி 190 மில்லியன் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் 19 மில்லியன் கர்ப்பிணி தாய்மார்களும் வைட்டமின் “ஏ”குறைபாட்டால் பார்வை இழப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் 2007ல் 5.7மூகுழந்தைகள் வைட்டமின் ‘ஏ’குறைப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர். தேசிய அளவில் வைட்டமின் ‘ஏ’உயிர்ச்சத்துதிரவம் வழங்கும் திட்டமானது 1970ல் துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வைட்டமின் ‘ஏ’உயிர்ச்சத்து திரவம்; கண்பார்வை குறைப்பாடுகளை தடுப்பதற்கு மிகவும் உதவுகிறது. வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குஇ மூச்சுக்குழல் பாதிப்பு மற்றும் தட்டம்மை பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் மூன்று வயது குழந்தைகளுக்கு அதிகநோய் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துகிறது.
இம்முகாம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு சுற்றுகளாக 20.09.2021 முதல் 04.10.2021 வரை நடைபெறுகிறது. இத்திரவமானது 6 மாத குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 58268 பேர் இருக்கின்றார்கள். மேலும் பிரசவித்த தாய்மார்களுக்கு 14வது நாளில் 2அட வைட்டமின் ‘ஏ’திரவம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு கண்பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கிராம சுகாதார செவிலியர்இ நகர சுகாதார செவிலியர் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மூலம் இத்திரவமானது 5 வயதிற்குப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட இருக்கிறது.
முகாம் நடைபெறும் இடங்களில் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சமூக இடைவெளியை கடைபிடித்தல்இ முககவசம் அணிதல்இ கை கழுவுதல் போன்றவைகளை கலந்து கொள்ளும் அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும், திருமருகல் வட்டாரத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டதற்காக செவிலியருக்கு பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்கள்.
இந்த முகாமில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர்.விஜயகுமார், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் மருத்துவர்.லியாகத்அலி, மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

