
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிவகாசி நகர் 23 வது மாநாடு சிவகாசி பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்க புரம் காலனி கிரி திருமண மண்டபத்தில் வைத்து நேற்று 19/09/2021
அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட குழு செயலாளர் அர்ஜுனன் துவக்க உரையாற்றினார்
இந்த மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார் வாழ்த்து உரை ஆற்றினார். வரவேற்புக் குழு தலைவர் எம் மகேந்திரன்
வரவேற்பு குழு செயலாளர் இரா. சுரேஷ்குமார், வரவேற்புக் குழு பொருளாளர் பி கணேசன், நகரச் செயலாளர் கே முருகன், நகர் குழு ஜே லாசர், இ, பழனி, கே. சண்முகம் , கே, அன்னலட்சுமி, வரவேற்புக் குழு துணைத் தலைவர் இரா கந்தசாமி உள்ளிட்ட கட்சி முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் சந்துரு கலைக்குழுவின் கிராமிய பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த மாநாட்டில் முக்கிய அம்சமாக சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
சிவகாசி நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் மற்றும் சிவகாசி பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகம் வணிக வளாகம் வாகன காப்பகம் உள்ளிட்ட விரிவாக்க பணிகளை விரைந்து முடித்திட மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதற்கான இடத்தில் லாரி முணையம் உடனடியாக அமைத்திட வேண்டும், சிவகாசி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மற்றும் ஸ்கேன் வசதி தலைக்காயம் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல் நோக்கு வசதிகளை உடனடியாக உருவாக்க வேண்டும் மேலும் சாட்சியாபுரம் திருத்தங்கல் ரயில்வே மேம்பால பணிகள் உடலே துவக்கி விட வலியுறுத்தப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நகராட்சி அந்தஸ்தில் இருந்த சிவகாசி நகராட்சி பல்வேறு அடிப்படை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்த மாநாட்டின் வாயிலாக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் தீர்மானமாக எடுத்துச்செல்லப்பட்டது இந்த விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
பி என் தேவா நிறைவுரை ஆற்றினார் இந்த மாநாட்டில் திரளான தொண்டர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்
செய்தி தொகுப்பு: விருதுநகர் மாவட்ட செய்தியாளர் எம் மாரிமுத்து
புகைப்படம் பி பாக்கியராஜ்

