ஏரல் அருகே உள்ள சிவகளை கிராமத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
ஏழை, எளிய, ஆதரவற்ற பெண்கள் சுய தொழிலை கற்றுக்கொண்டு தொழில் செய்து பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் இலவச கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி துவக்க விழா ஏரல் அருகே உள்ள சிவகளை கிராமத்தில் சேவை மையத்தில் வைத்து நடைபெற்றது
பயிற்சி முகாமிற்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அனைவரும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் எம் பொன்னையா கலந்துகொண்டு பயிற்சிபெரும் பெண்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் பயிற்சி கையேடு, நோட்டு, பேனா, பென்சில், டீ சர்ட், தொப்பி, அடையாள அட்டை ஆகிய பொருட்களை வழங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சிக்கு சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் மதிவாணன், ஆர் செட்டி ஒருங்கிணைப்பாளர் வீரபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியில் ஏழை எளிய ஆதரவற்ற பெண்கள் 35 பேர் பயிற்சி பெற உள்ளனர் இப்பயிற்சி தொடர்ந்து 10 நாட்கள் மதிய உணவுடன் முழுநேரமாக முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதோடு பயிற்சிக்குப் பின் தொழில் தொடங்க 35 சதவீதம் அரசு மானியத்துடன் கடன் உதவி கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. இப்பயிற்சியை ஓய்வுபெற்ற அரசு கால்நடை மருத்துவர் டாக்டர் ஆர் கே. ரெங்கநாதன் பயிற்சி அளித்து வருகிறார். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர் செட்டி மற்றும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


