சிங்கப்பெண்ணே… திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர்
பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக அரசு!!
திண்டுக்கல் மாவட்டம் ஒரு புதுமையான மாவட்டமாக தற்போது விளங்குகிறது. காரணம் மாவட்ட உயர் அதிகாரிகள் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் என்று அழைக்கப்படும் உயர் பதவிகளுக்கு குறிப்பாக முக்கிய அதிகாரிகளுக்கான பொறுப்புகளில் பெண் அதிகாரிகள் தேர்வு செய்து திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நியமனம் செய்துள்ளது.
ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் பெண் ஐஏஎஸ் அதிகாரி விஜயலட்சுமி நியமிக்க பட்டுள்ளார் அதுபோல் மாவட்ட அளவில் உள்ள முக்கிய அந்தஸ்து பொறுப்பான ஐஎஃப்எஸ் என்று அழைக்கப்படும் வனத்துறையில் முக்கிய பொறுப்பில் பெண் அதிகாரி வித்யா நியமிக்க பட்டுள்ள நிலையில்
மற்றொரு முக்கிய பதவியான திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவியில் இருந்த சக்திவேல் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டநிலையில் அந்த பணியிடத்திற்கு பெண் ஐபிஎஸ் அதிகாரி ரவளி பிரியா வை சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு நியமித்தது.
பெண்களுக்கே பெருமை சேர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 முக்கிய பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் முக்கிய பொறுப்புகளாக விளங்கும்
ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் என்று அழைக்கப்படும் உயர் பதவிகளுக்கு பெண் அதிகாரிகளை அரசு நியமித்தது பெண்மைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது 3 பெண் உயர் அதிகாரிகளின் சிறப்பான சேவை மூலம் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் பயன் அடைய வேண்டும் எனவும் 3 பெண் உயர் அதிகாரிகள் பணி சிறக்க காலை தீபம் நாளிதழ் குழுமம் சார்பில் வாழ்த்துகிறோம்
செய்தி தொகுப்பு
காலை தீபம் கோடை மோகன்

