அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் ஒன்றியச் செயலாளர் வெண்சங்கு தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுபாதேவி, ஒன்றியத் தலைவர் வசந்தா, ஒன்றியக்குழு முருகேஸ்வரி, வெற்றிச்செல்வி, தர்மதேவி, வளர்மதி, விமலா, உஷாராணி, மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், தினக்கூலியாக ரூ. 600 உயர்த்தி வழங்க வேண்டும், இந்த திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக்கும் விரிவு படுத்த வேண்டும், கொரோனா கால நிவாரணம் ரூ. 7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செய்தி தொகுப்பு:
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

