வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் இராஜன் தலைமையில் நடந்தது.
தேசிய ஊரக வேலை திட்டத்தின் பணிகளை நேரடியாக விவசாயி பணிக்கு வழங்க வேண்டும், காப்பீடு நிறுவனம் பயிர் ஆய்வு செய்த 60 நாட்களில் வழங்க வேண்டிய 2020-21 ஆம் ஆண்டிற்குரிய பயிர் காப்பீடு தொகை ஆறு மாதம் ஆகியும் அறிவிக்காததை உடன் அறிவிக்க வேண்டும், நடப்பாண்டு காப்பீடு நிறுவனத்தை உடன் அறிவிக்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளையும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி உடன் விவசாய கடன் வழங்க வேண்டும், கஜா புயல் பாதிப்புக்கு உடன் நிவாரணம் வழங்க வேண்டும், சிறு குறு விவசாயிகளுக்கு கிணறு, குட்டைகளுக்கு ஒரு முனை மின்சாரத்தை விலையில்லாமல் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு :
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

