• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா தபால் தலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

policeseithitv by policeseithitv
September 12, 2021
in Uncategorized
0
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா தபால் தலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா தபால் தலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு தொடக்க விழா தூத்துக்குடி வஉசி கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு தபால் தலை மற்றும் அஞ்சல் அட்டை வெளியிட்டார். அதன்பின் மகளிர் சுய உதவி குழுவினருக்கும் வியாபாரிகளுக்கு தொழில் தொடங்குவதற்காக கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேவி ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். அவர் பேசியதாவது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கடந்த 99 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து பங்குதாரர்களுக்கும் எப்போதும் உரிய மதிப்பை அளித்து வந்துள்ளது. வரலாற்றில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளான தேச விடுதலை, பொருளாதார தாராளமயமாக்கல், மற்றும் அன்மையில் உருவான covid-19 உள்ளிட்ட பல்வேறு சோதனையான காலகட்டங்களை வங்கி வெற்றிகரமாக சந்தித்து வந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இன்றைய தேதி வரை 13 ஆயிரத்து 753 வாடிக்கையாளருக்கு ரூபாய் 1,56,762 கோடி நிதியை வழங்கியுள்ளது. டிஜிட்டல் பேங்கிங் யுகத்தில் வாடிக்கையாளருக்கு மேம்பட்ட சேவையை வழங்கும் நோக்கத்துடன் பண பெட்டகம் மற்றும் கரன்சி நோட்டுகளை கையாளுதல் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தொழில்நுட்பத்தை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆகும் வங்கி ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஒட்டி சிறப்பு தபால் தலை தபால் அஞ்சல் அட்டை வெளியீட்டு நிகழ்வில் உடன் தொடங்கி நாங்கள் பல்வேறு முன்னெடுப்பு தொடங்கி உள்ளோம் இதையடுத்து டிஎம்பி மொபைல் டிஜி லா பி அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் நடமாடும் தடுப்பூசி முகாம் வானத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். மருத்துவ மற்றும் சுகாதார துறை நிறுவனங்களுக்கு எதிரொலிக்கும் வகையில் நிதி உதவி வழங்குவது எங்களது ஒரு வருட தொடர் முயற்சிகளின் முதன்மையானதாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்

முன்னதாக வஉசி கல்லூரி வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்துவைத்து ஒவ்வொரு அரங்கத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விளக்கங்களை கேட்டிருந்தார்.

விழாவில் வங்கியின் முன்னாள் டைரக்டர் சிஎஸ் ராஜேந்திரன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில் வங்கி சேர்மன் அண்ணாமலை உதவி சேர்மன் சிதம்பரநாதன், பொது மேலாளர்கள் சூரியராஜ், இன்பமணி, துணை பொது மேலாளர் அசோக் குமார், மற்றும் எம்ஆர் காந்தி எம்எல்ஏ, வஉசி கல்லூரி தாளாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, நாடார் சங்க தலைவர்கள் கரிக்கோல்ராஜ், என்ஆர் தனபாலன், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன், பாரதியை ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பால்ராஜ், பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஆர் கனகராஜ், மான்சிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post

அரியலூர் மாவட்டத்தில் இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறிய போலி நீதிபதி கைது

Next Post

தூத்துக்குடியில் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் – அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.

Next Post
தூத்துக்குடியில் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் –  அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடியில் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் - அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In