வேதாரண்யம் மார்க். கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே மார்க். கம்யூ. கட்சியினர் திரிபுரா மாநிலத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தாக்கி, கட்சி அலுவலகத்தை சூறையாடி, தீ வைத்து கொளுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி தலைமையில் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்டக்குழு வெற்றியழகன் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு நடராஜன், தங்கராசு, இளையபெருமாள், பாண்டியன், நகர பொறுப்பாளர் சிக்கந்தர், இளைஞர் பெருமன்ற முருகானந்தம், ஒன்றிய தலைவர் பிரபு, பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தங்கள் கட்சி முக்கிய பிரமுகர்களை தாக்கி, கட்சி அலுவலகத்தை சூறையாடி, தீ வைத்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

