தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற ஆன்லைன் மூலமாக வணிகர்கள் விண்ணப்பிக்கலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்
வரும் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற ஆன்லைன் மூலமாக வணிகர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது
2021ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான வெடிப்பொருள் தற்காலிக உரிமம் ஆன்லைன் மூலமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வணிகர்கள் இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமத்திற்கான விண்ணப்பத்தினை பின்வரும் ஆவணங்களை வரும் 30.09.2021க்குள் பதிவேற்றம் செய்து உரிமம் பெற்றுக் கொள்ள விண்ணப்பங்கள் பெறப்படும்.
கட்டிட வரைப்படம், இட உரிமத்திற்கான ஆவணம், வெடிப்பொருள் உரிமம் தலைப்பில் ரூ. 500 செலுத்திய செலுத்து சீட்டு, முகவரிக்கான ஆதாரம் (ஆதார், பான், குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவு சீட்டு அளவுள்ள புகைப்படம் -2 ஆகியவற்றுடன் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், 30.09.2021க்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

