• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் பார்வை

policeseithitv by policeseithitv
September 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் பார்வை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி வந்த வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை.*

*தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாநத்தம் அருகே இன்று (09.09.2021) காலை சுமார் 6 மணி அளவில் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனும், தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் நோக்கி சென்ற தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேனில் பயணம் செய்த சில்லாநத்தம் பகுதியை சேர்ந்துவர்களான கணேசன் மனைவி செல்வராணி (45), ரவீந்திரன் மனைவி காமாட்சி (எ) ஜோதி (40), முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா (48) மற்றும் நடுவக்குறிச்சி காலனியை சேர்ந்த அடைக்கலாஜ் மகள் மணிமேகலை (20) ஆகிய 4 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.*

*இது குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு தூத்துகுடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயம்பட்டவர்கள் 10 பேரையும் காப்பாற்றி அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.*

*சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அவருடன் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு, புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.*

*இச்சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார், தண்ணீர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய மேற்படி தண்ணீர் லாரி ஓட்டுனரான புதியம்புத்தூர் நயினார்புரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் பண்டாரம் (41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

Previous Post

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி

Next Post

வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு

Next Post
வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு

வேதாரண்யம் அருகே ஏற்பட்ட தகராறில் முதியவர் சாவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In