• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி

policeseithitv by policeseithitv
September 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை மற்றும் வருவாய் /பேரிடர் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தலைமையில் 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி இன்று (09.09.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் பேரிடரின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைக நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி நடத்த தீயணைப்பு-மீட்பு பணித் துறை இயக்குநர் கரன்சின்கா, உத்தரவின் பேரில், தென் மண்டல துணை இயக்குநர் ந.விஜயகுமார் அவர்களது ஆலோசனையின் பேரில் வருவாய் துறையினருடன் தீயணைப்பு-மீட்பு பணி துறையினர் இனைந்து பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று நடத்தப்பட்டது.

இதில் பேரிடர் மற்றும் அவசர காலங்களில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தங்களை வெள்ள அபாயங்களிலிருந்து காப்பாற்ற உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. தீயணைணப்பு-மீட்பு பணித் துறையின் மீட்பு உபகரணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மீட்பு உபகரணங்களின் பயன்பாடுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

தீயணைப்பு-மீட்பு பணித் துறைக்கு வழங்கப்பட்ட இஞ்சினுடன் கூடிய இரப்பர் படகுகளில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை பணியாளர்கள் கடலுக்கு சென்று கடலில் சிகியவர்களை மீட்கும் செயல்முறை விளக்க பயிற்சிகளும் தூத்துக்குடி நிலைய பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு-மீட்பு பணித்துறையின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கமாண்டோ தீயணைப்போர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

வருவாய் துறை மற்றும் தீயணைப்பு-மீட்பு பணி துறை மூலம் மாவட்டம் முழுவதும் இதுபோன்று பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்படும் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை தூத்துக்குடி மாவட்ட அலுவலர் ச.குமார், உதவி மாவட்ட அலுவலர் த.முத்துபாண்டியன், நிலைய அலுவலர்கள் ஜோ.சகயாராஜ், து.அருள் ராஜ், ம.சுந்தர் ராஜ் மற்றும்; பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்ட மசோதா – இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

Next Post

வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் பார்வை

Next Post
வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் பார்வை

வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு - சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் பார்வை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In