தியேட்டர் திறக்கலாம்… விநாயகர் சிலை வைக்கக்கூடாதா? -கொந்தளிக்கும் இந்து மக்கள் கட்சி!
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டம்!
__________________
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அனுமதி அளிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துவிட்டு ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கொரானா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், அரசின் முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் அவர்களின் உத்தரவின் பேரில்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமை தாங்கினார் . இவரது தலைமையில் இந்து மக்கள் கட்சி சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவற்றை செயல்பட வைத்துவிட்டு விநாயகர் சதுர்த்தியை மட்டும் கொண்டாட தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு உடனடியாக சதுர்த்தி விழாவை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளோடு கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் காஞ்சி லயன் டாக்டர் கே முத்து அவர்களின் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் திரளாக கலந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்
இவருடன் இந்து மக்கள் கட்சியின் காஞ்சி மாவட்ட தலைவர் லயன் த.காஞ்சி சரவணா ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது
தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் மற்றும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் வருடாவருடம் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு நல்கி நாங்கள் ஊர்வலம் இல்லாமலும் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்தோம் ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள சூழ்நிலையிலும் மதுபானக் கடைகள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு தடை விதித்துள்ளது இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மதுக்கடைகளும் திரையரங்குகளும் திறந்துள்ள நிலையில் இதன் மூலம் பரவாத குரானா இந்துக்களின் பண்டிகையான விநாயக சதுர்த்தி விழாவில் பரவும் என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆகையால் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வேண்டியும் விநாயகர் சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனுவை காஞ்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்தனர் .இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் U.சாய் ரவி, மாவட்ட துணைச் செயலாளர் G.ரஞ்சித் குமார் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தார்கள்.
செய்தி தொகுப்பு காஞ்சி முத்து

