ஈ.வெ.ரா பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடுவதற்கு பதில் அம்பேத்கர் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தால் அது நியாயமானது. திமுக அரசு முடிவை உடனே மாற்ற வேண்டும். என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள்!!
ஈ.வெ.ரா பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடுவதற்கு திமுக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர்
நயினார் நாகேந்திரன் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது எங்களுக்கு மிகவும் மன வேதனை அளிக்கிறது.
சமூகநீதியை கெடுத்த, இந்துக் கடவுளை மட்டுமே இல்லை என்று சொல்லி நாத்திகப் பிரச்சாரம் செய்த, இன வெறுப்பு கொள்கையை விதைத்த, 70 வயதுக்குமேல் பொருந்தாத திருமணம் செய்துகொண்ட, குடும்ப அமைப்பு முறையை சீர்குலைத்த, பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்த, தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொன்ன, தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன,சாகும் வரையிலும் இந்துக்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்திய, ஈவெரா பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று சொல்வதை கடுமையாக எதிர்க்கின்றோம்.
மு க ஸ்டாலின் அவர்களின் இந்த அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு தெரிவித்து இருப்பது எமக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈவெரா பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று சொல்வதற்கு வரவேற்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தால் அது நியாயமானது வரவேற்கத்தக்கது
ஆனால் பட்டியல் இன மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு, பட்டியல் இன மக்களை ஒதுக்கி வைத்த
ஈ.வெ.ரா பிறந்த செப்.17ம் தேதி சமூக நீதி நாள் என்று கொண்டாடுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும். திமுக அரசு இந்த முடிவை கைவிட்டாள் அனைத்து தரப்பினரும் வரவேற்பு கொடுத்து இருப்பார்கள் என்று அர்ஜுன் சம்பத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் செய்தி தொகுப்பு காஞ்சி முத்து

