நாகப்பட்டினம் விக்டரி லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சிக்கல் ஊராட்சி மன்றம் இணைந்து சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் மரிய மார்ட்டின் தலைமை வகித்தார்.
முகாமில் கலந்து கொண்ட 250 நபர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் அறுவை சிகிச்சைக்கு தகுதி பெற்ற 40 நபர்கள் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் லயன்ஸ் மண்டல தலைவர் செய்யது பகுரூதீன் உட்பட சங்க பிரதிநிதிகள், சிக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

