சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கொடைக்கானலில் கஞ்சா விற்பனை அமோகம் புதிய டிஎஸ்பி சீனிவாசன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கு வாரா?
____________
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை கனஜோராக நடைபெறுவதாகும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இங்கு விற்பனை படுஜோராக நடைபெறுகிறதாம் அதுபோல் தங்கும் விடுதிகளில் பெரும் தொகை பணம் வைத்து சீட்டு விளையாட்டு நடைபெறுகிறது சட்டவிரோதமாக நடைபெறும் இந்த சீட்டு விளையாட்டு பல்வேறு விடுதிகளில் கிளப் போல் நடைபெறுகிறது திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பல மாவட்டங்களிலிருந்து நாள் கணக்கில் தங்கள் குடும்பங்களை மறந்து கொடைக்கானலில் ரூம் பிடித்து சூதாடி வருகிறார்கள் இந்த சூதாட்டத்திற்கு விடுதி உரிமையாளர்கள் பெரும் தொகையை வசூல் செய்து வருகிறார்களாம் சூதாட்டம் கஞ்சா விற்பனை கஞ்சா காளான் வளர்ப்பு என பல சமூக விரோத செயல்கள் கொடைக்கானலில் களைகட்டி வருகிறது இது ஒரு பக்கம் இருக்க மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் இந்த பகுதியில் களைகட்டி காணப்பட்டது இதுகுறித்து தென் மண்டல ஐஜி மற்றும் திண்டுக்கல் சரக டிஐஜி ஆகியோருக்கு புகார் சென்ற வண்ணம் உள்ளன அதனடிப்படையில் மசாஜ் சென்டருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது மசாஜ் சென்டர் அட்டூழியம் குறைந்துள்ளது ஆனால் முழுமையாக ஒழிக்கப்படவில்லை
அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த குமார் (வயது 40), இதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 38), ஆகிய இருவரும் இதே பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பது டிஐஜி வரை புகார் சென்றதாகவும் அதன் பிறகு இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது
இதுபற்றி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்ற குமார் மற்றும் விஜயகுமாரை கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர் அதுபோல் அதுபோல் ஒரு பெண் தொடர்ந்து அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசார்கள் கவனத்திற்கு வர இந்தப் பெண்ணை கைது போலீசார் கைது செய்துள்ளனர் இதுபோன்று பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்ந்து கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது இதனைப் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றிருக்கும் சீனிவாசன் அவர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவார் என்ற நம்பிக்கையில் கொடைக்கானல் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் புதிய டிஎஸ்பி நடவடிக்கை என்ன என்பது பொறுத்திருந்து பார்ப்போம் புதிய டிஎஸ்பி யின் அதிரடி நடவடிக்கை
கொடைக்கானல் மக்களுக்குத் தேவை என்பதை போலீஸ் செய்தி நியூஸ் சேனல் குழுமமும் எதிர்பார்க்கிறது

