நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக வரும் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தரமான அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021 கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து தரமான அரிசி பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்குட்பட்டு ஒரு முறை திட்டத்தின் கீழ் 15.09.2021 முதல் 15.11.2021 வரை செய்து கண்டு முதல் அரிசியினை கிடங்கில் ஒப்படைப்பு செய்திட ஏதுவாக தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 03.09.2021 முதல் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்தை 04365-251393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

