இந்திய சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டையொட்டி வேதாரண்யத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மாரத்தான் ஓட்டம்
வேதாரண்யம் சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இன்று இந்திய சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டையொட்டி நேரு யுவகேந்திரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன், சுதந்திர போராட்டத் தியாகி சா்தார் வேதரத்னத்தின் பேரன் அ.வேதரத்னம், நேரு யுவகேந்திரன் இணை இயக்குநா் நீலகண்டன், பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேதாரண்யம் வடக்கு வீதி உப்பு சத்தியகிரக நினைவு கட்டிடத்தில் துவங்கி பேரணி நகரின் முக்கிய நான்கு வீதிகள் வழியாக சிலம்பாட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் வந்தடைந்தது. இளைஞர் மன்றம், மாதர் சங்கங்கள், விளையாட்டு சங்கங்கள், மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு டீ சர்ட் அகரம் பள்ளியின் தாளாளர் விவேக் வெங்கட்ராமன் வழங்கினார். நிகழ்ச்சியை நேரு யுவகேந்திர பொறுப்பாளா் சுந்தர் நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

