அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்
புதுக்கோட்டையில் வெகுசிறப்பாக நடைபெற்றது
_________
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்
அறிமுகக் கூட்டம் நேற்று 04/09/2021
காலை 11 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் மார்த்தாண்டபுரம் இரண்டாவது தெருவில் உள்ள எம் ஏ கிராண்ட் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்
நிறுவனர் தலைவி லட்சுமி ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்,
மாநில நிர்வாகிகள்
பலரும் பங்கேற்றனர் மாநில கௌரவத் தலைவர் ராஜகோபாலன், பொதுச் செயலாளர் எம் சுரேஷ், மாநில பொருளாளர் சி ஆர் அறிவழகன், மாநில இணைச் செயலாளர் ஆர் மதுரை வீரன், மாநில அமைப்பு செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமைச் செயலாளர் என் ராஜா , மாநில துணைத் தலைவர்
வெ. அர்ஜுனன், மாநில துணைத் தலைவர் வே. மதன், மாநில அமைப்பாளர் எஸ். சௌதண்யா , மாநில செயலாளர்கள் அனந்தநாயகி, பாலாஜி, தனசேகரன், பாலசுப்ரமணியன், மாசி மாலை,
மாநில செய்தி துனை தொடர்பாளர் பாஞ்சை கோபால்சாமி
உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும்
செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் தியாகராஜன் ராவுத்தர் கனி சாம்பு அசோகன் நவீன் குமார் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இந்த அறிமுக கூட்டத்தில் முன்னிலை வகித்தனர்
மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் முதல் அறிமுகம் மற்றும் கலந்து ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது விழாவிற்க்கு ஆன ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் அறிமுக கூட்டத்தில் தலைமை உரையாற்றிய நிறுவனத் தலைவி லட்சுமி ஜெயக்குமார் அவர்கள் இந்த இயக்கத்தின் கட்டமைப்புகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் இந்த அமைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் மேலும் அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை பதிவு செய்யும் பொழுது அதிகாரிகள் அகில இந்திய என்ற வார்த்தை வருவதாலும் சட்ட உரிமை என்ற முக்கிய வார்த்தைகள் வருவதாலும் இந்த பெயர் பதிவு செய்ய இயலாது என பதிவுத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நேரத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அதன் நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக எடுத்துரைத்து வழக்கறிஞர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலரின் பெரும் முயற்சியில் பதிவு செய்யப்பட்டதாகும் அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை இந்திய அளவில் ஒரு பேரியக்கமாக உருவாக்கி நாட்டு மக்களுக்கு சட்ட உரிமைகள் பெறுவதற்கு நாம் முழு முயற்சியில் ஈடுபட வேண்டுமென லட்சுமி ஜெயக்குமார் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோதினி தலைமையில் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களும் சேலம் மாவட்ட செயலாளர் ரோஜாராணி அவர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்களும் தூத்துகுடி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையிலும் திருச்சி மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமையிலும் கன்னியாகுமரி தென்காசி திருவள்ளுர் திருநெல்வேலி விருது நகர் மாவட்டம் திருமதி சுஜாதா மோகன் அவர்கள் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் பா.பாக்கியராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.மாரிமுத்து மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ‘இருந்து.சுமார் 300 நபர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் நிறுவனத் தலைவி சமூக சேவகி லட்சுமி ஜெயக்குமார் அவர்களுக்கு மாநில செய்தி துனை தொடர்பாளர் பாஞ்சை கோபால்சாமி பொன்னாடை அனிவித்து கெளரவித்தார். விழா முடிவில் மாநில துனைத் தலைவர் அர்சுனன் நன்றி கூறினார்
செய்தி தொகுப்பு விருதுநகர் மாவட்ட செய்தியாளர் M மாரிமுத்து புகைப்படம் Pபாக்கியராஜ்

