புளியம்பட்டி காவல் நிலைய திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய கைதி கைது – கைது செய்த புளியம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.*
கடந்த 16.08.2021 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (37) என்பவர் புளியம்பட்டி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலிருந்த மேற்படி சிறைக் கைதி பாலமுருகன் 23.08.2021 அன்று உடல் நலமின்மை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 25.08.2021 அன்று அதிகாலை போலீசாரின் பாதுகாப்பிலிருந்து கைதி பாலமுருகன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தப்பியோடிய கைதி பாலமுருகனை கைது செய்வதற்கு 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. தர்மர் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. செல்வன், முதல் நிலை காவலர் திரு. கொடிவேல், காவலர்கள் திரு. விடுதலை பாரதிகண்ணன், திரு. மகேஷ் மற்றும் திரு. சீமோன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவலங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த தப்பியோடிய மேற்படி பாலமுருகனை இன்று அதிகாலை கைது செய்து, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் ஆகியோர் விசாரணை செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துரை நடுவர் எண் -1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் பேரூரணி சிறையிலடைத்தனர்.
*♻️கைது செய்த புளியம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. தர்மர் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.*

