மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி உட்கோட்ட தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் தாக்கலான 4 கன்னகளவு வழக்குகளில் ஈடுபட்ட எதிரியான செந்தில்குமார், நாகமலை புதுக்கோட்டை என்பவரை, கைது செய்து மேற்படி வழக்குகளில் களவுபோன சொத்துக்களான கம்ப்யூட்டர்& மானிட்டர் -6, சி.பி.யூ-6, கேமரா -1 ஆகியவற்றை மேற்படி எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சீரிய பணியினை செய்து வழக்குகளை கண்டுபிடித்த உட்கோட்ட தனிபடையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள். மேலும், மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.V. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.

