தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் . பல்வேறு அமைப்புகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை
_________
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை திறக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து
தாமிர உருக்கு ஆலை ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்ததாவது தாமிர உருக்கு ஆலையானது மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகின்றது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல பெண்களுக்கு நன்மைகள் செய்து வருகின்றனர். வங்கிகள் மூலம் கடன் உதவிகள் மற்றும் தையல் இயந்திரங்களை பெற்று சுயமாக தொழில் செய்வதற்கு தாமிர உருக்கு ஆலை மூலம் பல நன்மைகள் பெண்களுக்கு கிடைத்து வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கி ஏழை எளிய மாணவர்கள் படிப்புக்கு உதவி செய்தனர் அதுமட்டுமல்லாமல் இந்த தாமிர உருக்கு ஆலையால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசானது தாமிர உருக்கு ஆலை எதிர்ப்பாளர்களுக்கு மதிப்பளிப்பது போல் எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மூலம் பல்வேறு மிரட்டல்களை நாங்கள் சந்தித்து வருகிறோம்
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரில் பல்வேறு வளர்ச்சிகள் காணப்பட்டது ஆகையால்
உடனே எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்த்து இந்த ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஒரு வழியை ஏற்படுத்தி தருமாறு தாமிர உருக்கு ஆலை ஆதரவாளர்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறோம் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரம் சங்கத் தலைவர் மற்றும் ஒப்பந்தகாரர் தியாகராஜன் எஸ்.டி.பொன்ராஜ் (தெற்கு வீரபாண்டிய புரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்), மணிகண்ட ராஜா (வழக்கறிஞர்),ஜெயகனி (தாயகம் டிரெஸ்ட்), தனலட்சுமி (துளசி டிரெஸ்ட்), மற்றும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றி உள்ள கிராம மக்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

