வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கனமழை பெய்தது. வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான ஆயக்கரன்புலம், கருப்பம்புலம், செம்போடை, புஷ்பவனம், கோடிக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
வேதாரண்யத்தில் இன்று காலை 8 மணி வரை 44.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய இடங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலையிழந்தனர். மேலும் உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் 2ம் இடம் வேதாரண்யம் பகுதி வகிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பளத்தில் தேங்கி நிற்கும் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.
செய்தி தொகுப்பு :
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

