நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கு நேரடி சோ்க்கை மூலம் பயிற்சியில் சேர வரும் 15.09.2021 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 15.09.2021 வரை 2021-2022ஆம் ஆண்டிற்கு நேரடி சேர்க்கை மூலம் பயிற்சியாளா்கள் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே மேற்படி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் கல்வி சான்றிதழ்களுடன் உடன் நேரில் சென்று பயிற்சியில் சேரலாம் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

