தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி.இ.கா.ப., தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்.இ.கா.ப., மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் , பெறப்பட்ட புகார்களுக்கான தீர்வுகள் குறித்து ஆய்வு செய்து விளக்கம் கேட்டறிந்தார்.
மேலும் புகார்களை காவல்துறையினர் காலதாமதமின்றி விசாரித்து தீர்வு காண அறிவுறித்தினார்.இதைத்தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.

