ஸ்ரீவைகுண்டம். சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அவர்களின் 38 வது பிறந்தநாள் விழா!! சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிடபார்வையாளர் தினேஸ் குண்டுராவ் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
—————————
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ் அவர்களின் 38 வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள், மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளர் தினேஸ்குண்டுராவ் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டப்பட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் செல்லப் பிள்ளையாக வலம்வரும் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா ஸ்ரீவை தொகுதி முழுவதும் காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது காங்கிரஸ் தொண்டர்கள் முற்றும் பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜ் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவை தொகுதியில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என தொகுதியில் பல இடங்களில் அசத்தினர். தனது பிறந்த நாளை சத்தியமூர்த்தி பவனில் வைத்து ஊர்வசி அமிர்தராஜ் கொண்டாடினார் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் க்கு கேக் ஊட்டினார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிடபார்வையாளர் தினேஸ் குண்டு ராவ் ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கர் காங்கிரஸ் எடிசன் சந்திரபோஸ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஊர்வசி அமிர்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் மேலும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மாணிக் தாகூர் எம்பி காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ் செய்தி ஆசிரியர் எம் ஆத்தி முத்து மற்றும் பத்திரிக்கையாளர் அமைப்பு நிர்வாகிகள் பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

