மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை தந்து ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்
————
குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லுாரியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் அதிகாரிகளின் மத்தியில், நேற்று (29ம் தேதி) நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உரை நிகழ்த்தினார் .இதற்காக, மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலை வழியாக, காரில் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு மாலை, 3:45 மணிக்கு வந்தார். இவருடன் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே உட்பட உயர் அதிகாரிகள் வருகை புரிந்தனர். அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் கலோன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், பகல் 12:00 மணிக்கு பிறகு, கோவை சென்று, அங்கிருந்து டில்லி புறப்பட்டார் .டில்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு, நேற்று முன்தினம் மதியம், 12:20 மணிக்கு ராஜ்நாத் சிங் வந்தார்.மோசமான வானிலைஅங்கிருந்து ஹெலிகாப்டரில் குன்னுார் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக அவர் குன்னுார் புறப்பட்டார். வழியில் மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி விருந்தினர் மாளிகையில், சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். ராஜ்நாத் சிங் வருகையை முன்னிட்டு, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந் தனர்.
செய்தி தொகுப்பு நீலகிரி அப்பாஸ்

