நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.
இதில் 450 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 100 நபர்கள் கண் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் ஆயக்காரன்புலம் அரிமா சங்கத் தலைவர் பழனியப்பன், செயலாளர் சம்பத், மாவட்ட தலைவர் இளங்கோவன், வீரமணி உட்பட அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

