வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 07.09.2021 வரை 10 நடக்கிறது. இதில் தினசரி தேர் பவனிகள், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. இதில் கொரொனா பெருந்தொற்றால் மாவட்ட நிர்வாக உத்தரவு படி பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இக்காலக்கட்டத்தில் அங்கு ஹோட்டல்கள், கடைகள், தங்கும் விடுதிகள் திறப்பதற்கு அனுமதி இல்லாததால் கடந்த காலங்களில் களைக்கட்டிய பெருவிழா களையிழந்து காணப்பட்டது.

