தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்.
————
வேதாரண்யம்: தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் சென்னையில் எம்பிஏ படிக்கும் மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் வசிஷ்ட விக்னேஷ். இவர் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் பூடான் நாட்டில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் சீனியர் ஆண்கள் பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில் வசிஷ்ட விக்னேஷ் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.
இவருக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன அதனைத் தொடர்ந்து அவர் சொந்த ஊரான தேத்தாகுடி தெற்கு கிராமத்திற்கு வந்ததையடுத்து அவருக்கு கிராமத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வேதாரண்யம் லயன்ஸ் சங்கத்தினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்


