ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு கரோனா நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் கரோனா பேரிடரை எதிர்கொள்ள அனைவரும் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதியை, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு கடந்த மே மாதம் 15-ம் தேதிவங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் சந்தையில் விற்பனை செய்யும் அளவிற்கு சிறிய அளவில் தங்கள் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்து, இன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்த நிறுவனமாக விளங்கி வருகிறது சக்தி மசாலா நிறுவனம்.
ஆரம்பத்தில் இருந்தே நிறுவனம் வளர்ந்து வருவதை மட்டும் விரும்பாத அவர்கள், தங்களை வளர்த்து விட்ட பூமிக்கு எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் நலப்பணிகள் பலவற்றை செய்து வந்தனர்.
பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டி கொண்டுப்பது, கிராம புறங்களில் நிழற்குடை அமைத்து கொடுப்பது, கோவில்கள் புனரமைப்பது, பள்ளி குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, கை கால் ஊனமானவர்களுக்கு வேலை கொடுப்பது என்று எண்ணற்ற சமூக நல பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டனர்.
இன்றைக்கு போட்டிக்கு பல நிறுவனங்கள் உதித்து விட்டாலும், அன்றிலிருந்து இன்று வரை ஒரே தரத்தையும், பழைய பக்குவத்தையும் கடைபிடித்து வருவதால் இன்னும் மார்கெட்டில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும் சாமாளிக்க கூடிய அளவுக்கு நிலையை வளர்த்துக்கொண்டுள்ளனர்.
இடையில் சக்திதேவி என்ற அறக்கட்டளை ஆரம்பிக்கபப்பட்டு, வருடாவருடம் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.
இப்படி பல்வேறு உதவிகளை ஈரோடு மாவட்ட மக்களுக்கு செய்து வந்த நிலையில், கஜா புயலினால் பாதிக்ப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் நோக்கில் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
அதன் படி, தங்கள் நிறுவனத்தின் சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கி இன்னும் பல உதவிகள் வழங்கப்பட உள்ளதாக உறுதியளித்துள்ளனர்.


